Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி.பெருமாள்
காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த கிருஸ்ணவேனி என்பவர், நேற்று (23) மாலை 5 மணிக்கு பின், தனது தாயை காணவில்லை என, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மகேஸ்வரி (வயது 55) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட வேலைக்கு செல்லும் குறித்த பெண், வேலை முடிவடைந்ததன் பின், விறகு சேகரிக்க சென்றதாகவும், அதன் பின் இரவு 10 மணி வரையிலும், அவர் வீடு திரும்பாததால், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகளும் அதிரடி படையினரும் இணைந்து, குறித்த பெண்ணைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதினாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago