2025 மே 05, திங்கட்கிழமை

விறகு தேடி சென்றவர் சடலமாக மீட்பு

Janu   / 2024 ஜனவரி 11 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில் தோட்டம் 2 ம் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய சுப்புன் நாமல் என்பவர்  புதன்கிழமை (10)  மதியம் 11 .30 மணியளவில் விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பாததால் இது தொடர்பில் அவரது தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு  செய்துள்ளார்.

அதற்கமைய பொலிஸார்  ஈடுபட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கெனில் தோட்டம் 2 ம் பிரிவு வன பகுதியில் உள்ள  ஓடையொன்றிலிருந்து   காணாமல் போன நபர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் , மீட்கப்பட்டுள்ள சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X