2025 மே 19, திங்கட்கிழமை

விற்பனைக்காக கடத்தப்பட்ட மொனராகலை சிறுமி மீட்பு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இந்த மாதம் 10ஆம் திகதி காணாமல் போன 5 வயது சிறுமி, பண்டாரவளை வாராந்த சந்தைப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வெல்லவாய பொலிஸாரால் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமிக்கு, யோகட் வாங்கித் தருவதாக தெரிவித்து அழைத்துச் சென்ற நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுமியின் வீட்டில் கூலி தொழில் செய்து வந்த தியதலாவை- குருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறுமியை வெல்லவாய நகரிலிருந்து பண்டாரவளைக்கு பஸ்ஸில் சென்று அங்கு வாராந்த சந்தைப் பகுதியில் இரவைக் கழித்துள்ளார்.

மறுநாள் குருதலாவையிலுள்ள அவரது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட போது சந்தைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார்.

 இதன்போது சிறுமியை பணத்துக்கு விற்பதற்கு சந்தேகநபர் தயாராகி இருந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X