2026 ஜனவரி 21, புதன்கிழமை

விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 18 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சனகுமார ஆரியதாஸ

தம்புளை பொருளாதார மத்திய நிலையம் நேற்று (17) அதிகாலை திறக்கப்பட்ட நிலையில்,
மரக்கறிகளின் விலை பாரியவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் மூடப்பட்டிருந்த குறித்த பொருளாதார நிலையம், நேற்றும் (17) இன்றும் (18)
திறக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறிகளுக்கான கேள்வி அதிகரிப்பே விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.



எனினும் பொருளாதார மத்திய நிலையத்தில் அதிக விலைக்கு கொள்வனவு செய்து, சில்லறை
விலைக்கு விற்பவர்கள் பெரிதும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதால், குறைந்தளவ
மரக்கறிகளையே கொள்வனவு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அண்மை சில நாள்களாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்தே காணப்படுவதாகத் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X