Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை - டொரிங்டன், கல்மதுரை தோட்டத்தில், புதிய விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள், நேற்று முன்னெடுக்கப்பட்டன.
மேற்படி தோட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு மத்தியில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், சமூக வலுவூட்டல், உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைவாக, 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்
ஏ.பி சத்திவேல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் ஜீவன் தொண்டமான், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் கதிர்செல்வன், வட்டாரத்துக்கான பிரதேச சபை உறுப்பினர் இராமன் கோபால், மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் அருள்சாமி பாரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
9 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago