Kogilavani / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மரக்கறி விவசாயத்தின் ஊடாக சமூக பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் பங்காளிகளாகி நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில், மெராயா விவசாயக் கழகம் 2021ஆம் ஆண்டுக்கான பணிகளை ஜனவரியில் ஆரம்பிக்க திடசங்கட்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த விவசாயக் கழத்தின் தலைவர் எஸ்.லெட்சுமணன், எனவே இந்த விவசாயக் கழகத்தில் பதிவுசெய்யாதவர்களை உடனடியாக பதிவுசெய்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
476/N கிராமசேவகர்ள் பிரிவு, தங்கக்கலை பிரதேச விவசாயிகளுக்கே அவர் அழைத்து விடுத்துள்ளார்.
தொடர்ந்துரைத்த அவர், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே, திங்கட்கிழமை(27) லிந்துலை பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டு கமநல திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயக் கழகத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார் என்றும் இதன்போது, லிந்துலை, மெரயா பிரதேச விவசாயிகள் தொடர்பிலும் அவர்களது எதிர்பார்ப்புகள், குறைபாடுகள் தொடர்பிலும் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
லிந்துலை கமநல விவசாயத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிங்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்த விலையில் உரம், விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்க முன்வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago