2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விஷேட அதிரடிப் படையினரால் துப்பாக்கி மீட்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை - வெல்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் குறித்த வீட்டை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வீட்டினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

அத்துடன்   35 வயதுடைய வெல்கொல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

துப்பாக்கியையும் குறித்த சந்தேகநபரையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .