Ilango Bharathy / 2021 ஜூன் 28 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜயக்குமார் ஷான்
மொனராகலை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களில் கடந்தாண்டு அமைக்கப்பட்டு,
முழுமைப்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ள 150 வீடுகளை முழுமைபடுத்துவதுடன், அதற்கானக் காணி உறுதிப் பத்திரங்களையும் பெற்றுத் தரும்படி, வீட்டு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட வீடமைப்பு அசைமச்சின் கீழ்,
இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மொனராகலை, பாராவிலை, கும்புக்கனை,
வெள்ளச்சிக்கட, முப்பனெவெளி, மரகலை ஆகிய தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளே இவ்வாறு முழுமைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வீடுகள் மின்சாரம், நீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளின்றியும்
காணப்படுவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, குறித்த வீடுகளை பூரணப்படுத்தி அம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, வீடுகளுக்கு
காணி உரிமத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago