Kogilavani / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
காவத்தை - அவுப்பை தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசை ஒன்று, காவத்தைப் பொலிஸாரால் இடித்து உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுப்பை தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள், மேற்படித் தோட்டத்தின் தலுகலை சந்தியில், பாரிய ஆர்ப்பாட்டத்தில், இன்று (8) காலை ஈடுபட்டனர்.
மேற்படித் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளுடன் பெண்ணொருவர் வசித்து வந்த வீடு காலநிலை சீர்கேட்டால் சேதமடைந்ததையடுத்து, அப் பெண் சேதமடைந்த வீட்டுக்கு அருகில் தற்காலிகக் குடிசை ஒன்றை அமைத்தார்.
தற்காலிகக் குடிசை அமைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று தெரிவித்துதோட்ட முகாமையாளர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததார்.
முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்படிக் குடிசையை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

26 minute ago
34 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
55 minute ago