2026 மே 09, சனிக்கிழமை

வீட்டைப் பதம்பார்த்த தனியார் பஸ்

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.சதீஸ் 

பொகவந்தலாவ எலிப்பட மேற்பிரிவுத் தோட்டத்திலுள்ள வீடொன்றின் மீது, தனியார் பஸ் மோதியதில் வீடும் பஸ்ஸும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (7) காலை இடம்பெற்றுள்ளது.

எலிப்பட கீழ்ப்பிரிவு தோட்டத்திலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பஸ்ஸே, இவ்வாறு வீட்டின் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்றும் விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .