2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வீட்டை உடைத்து கொள்ளை

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புஷ்பராஜ் குழந்தைவேல்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வளாகத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றை, நேற்று (24) உடைத்து, தங்க நகை மற்றும் பணம் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவத்தில், அரை பவுன் தங்கச் சங்கிலி நான்கு, இரண்டு வளையல்கள், மற்றும் பணம் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளன.

வீட்டில் ஒருவரும் இல்லாத வேளையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர்கள் வீட்டுக்கு இரவு எட்டு மணியளவில் வந்த போது, வீடு உடைக்கப்பட்டு, ந​கை, பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியவந்ததாகவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், பல கோணங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X