Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 12 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான வீதியை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இன்று (12) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறும், கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பூண்டுலோயா, கிகிலியாமான 3ஆம் கட்டை பகுதியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, டன்சினன் காந்திபுரம், டன்சினன் மத்திய பிரிவு, டன்சினன் கீழ்பிரிவு, சீன் கீழ்பிரிவு ஊடாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்தது.
அதன்பின் அங்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு, போராட்ட ஏற்பாட்டுக்குழுவால் ஊடக சந்திப்பொன்றும் நடத்தப்பட்டது.
12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், டன்சினன் வீதியின் விடியலுக்காக முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு 12 தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் முழு ஆதரவையும் வழங்கினர். மதகுருமார்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்தோடு, பூண்டுலோயா நகரங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago