2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வீதியை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையக விஜயத்தையொட்டி, மிக அவசரஅவசரமாக முன்னெடுக்கப்பட்ட ஹட்டன் நகரிலிருந்து நோர்வூட் வரையான வீதியின் அபிவிருத்திப் பணி, இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால், அவ்வீதியால் போக்குவரத்த செய்வதில் தாம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியை செப்பனிடுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வீதியை அபிவிருத்திச் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன, வனராஜா பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளனவென, பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், ஹட்டன் முதல் கத்தோலிக்க தேவாலயம் வரை கற்கள் கொட்டப்பட்டுள்ள போதிலும், வீதி அபிவிருத்திப் பணிகள் மட்டும் முன்னெடுக்கப்படுவதில்லை என, மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது, மழை காலம் என்பதால், இவ்வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வீதியின் அபிவிருத்திப் பணியை நிறைவுசெய்வதற்கு முன்வர வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிவனொளிபாத மலையின் பருவ காலம் ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால், அதற்கு முன்னர் இவ்வீதி அபிவிருத்திச் செய்யப்பட வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .