2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வீதியை செப்பனிடுமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியாவிலிருந்து - காட்மோருக்கு செல்லும் பிரதான வீதியின் மல்லியப்பு சந்தி வரையான 5 கிலோ மீற்றர் தூரமானது, குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதியில் போக்குவரத்து செய்வதில்  தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியை 11 தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 5,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், நாளாந்தம் பயன்படுத்தி வருவதாகவும், கடந்த 20 வருடங்களாக இவ்வீதி புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீதி செப்பனிடப்படாமல் உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவசர நிலைமைகளின் போது, கர்ப்பிணிகள் மற்றும் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்வதாகவும், வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வீதியை செப்பனிட முன்வர வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X