2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி விபத்து

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக  நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) அன்று மாலை 04.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஹட்டன் பகுதியில் இருந்து வந்த பேருந்திற்கு இட ஒதுக்கீடு வழங்க முற்பட்ட போதே குறித்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து தாகவும் மேலும் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபாபட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் சதீஸ்     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .