2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வீதியோர வியாபாரிகளுக்கு நவீன கடைத் தொகுதிகள்

Kogilavani   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய, நுவரெலியா - கண்டி பிரதான வீதி, டொப்பாஸ், வெஸ்வாடோ ஆகிய பகுதிகளில் நவீன கடைத்தொகுதிகளை அமைத்துக் கொடுப்பதற்கு, நுவரெலியா பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் இதற்கான  நடவடிக்கைகளை  எடுத்துள்ளதுடன்,  டொப்பாஸ், வெஸ்ட் வாடோ ஆகிய பகுதிகளுக்கு இன்று (18) விஜயம் மேற்கொண்டு, கடைத்தொகுதிகள் அமைக்கும் இடங்களைப் பார்வையிட்டார்.

நுரெலியா-கண்டி  பிரதான  வீதியில், சிறுசிறு  கூடாரங்களை  அமைத்து  மரக்கறி  வியாபாரங்கள்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. இவ்வாறு வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்காகவே, நவீன கடைத்தொகுதிகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன என்று, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலுயோகராஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X