Editorial / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்விபத்து புஸ்ஸலாவை, இரட்டைப்பாதை பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பளை பொலிஸ் கைரேகை பிரிவுடன் இணைந்து புஸ்ஸலாவை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
35 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
50 minute ago