2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

வெற்றிலை குதப்பி துப்பத்தடை

Editorial   / 2023 செப்டெம்பர் 08 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித  ஆரியவன்சவை  

ஊவா மாகாணத்தின் கடைசி நகரமான பதுளை, வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்புச் சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல்  போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதுடன், அது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதைத் தவிர, பொதுச் சந்தை இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது.  சில பாடசாலை மாணவர்கள் பாக்கு மற்றும் புகையிலையை மட்டும் மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  அவர்களும் பதுளை பஸ் நிலையத்தில் இவ்வாறு எச்சில் துப்புவதும் தெரியவந்துள்ளது.

பதுளை பஸ் நிலையத்தில் வெற்றிலை துப்புவது, சுண்ணாம்பு தடவுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பதுளை மாநகர சபையின் சுகாதார திணைக்களம் பதுளை பொலிஸாருடன் இணைந்து வெற்றிலையை துப்புபவர்களையும் சுண்ணாம்பு தடவி வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வாரம், இதுபோன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா ஒரு டூபாய் அவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X