2026 மே 09, சனிக்கிழமை

வெலிஓயா தோட்டத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன், எஸ் சதீஸ்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, இன்று (16), நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன்-வெலிஓயா தோட்ட மேற்பிரிவில், அடிக்கல் நாட்டப்பட்டது.  

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் விநோத் கே.ஜேக்கப் கலந்து கொண்டார். அத்துடன், இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் திரேந்திர சிங், பெருந்தோட்டத்துறை, விவசாய ஏற்றுமதி அமைச்சர் ரமேஷ் பத்திரண, முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .