2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வெல்லவாயவில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மாலபேயில் சிக்கியது

R.Maheshwary   / 2022 ஜனவரி 07 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வெல்லவாய நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில், அந்த மோட்டார் சைக்கிளானது, நேற்று முன்தினம் (5) மாலபே பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3,75,000 ரூபாய் பெறுமதியான அந்த மோட்டார் சைக்கிள், வாரியபொல பிரதேசத்தில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய,  மொனராகலை பொலிஸார் வாரியபொல பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர்.

எனினும் அந்த மோட்டார் சைக்கிள் மாலபே பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிந்துகொண்ட பொலிஸார், மாலபே பிரதேசத்துக்குச் சென்ற போது, மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் தப்பிச் செல்வதை அவதானித்துள்ளனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார், சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், போதைப் பொருளுக்கு அடிமையான 29 வயதுடையவர் என்றும், இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை சந்தேகநபருடன் மோட்டார் சைக்கிளும் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X