Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தேவையான தடுப்பூசிகளை இராணுவ வைத்தியசாலையின்
மூலம் பெற்று கொள்ள முடியும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ
தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட கொரோனா தடுப்பு குழு கூட்டம் நேற்றுமுன்தினம் (13) நிகழ்நிலை ஊடாக
இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தொழில் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்கு பிற நாடுகளுக்கு செல்வதற்காக பல்வேறு
தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை உரிய
ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கை இராணுவ வைத்தியசாலையின் மூலம் பெற்று கொள்ள
முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா
மரணங்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து வருவதாக கேகாலை மாவட்ட பிரதேச
சுகாதார பணிப்பாளர் சமில விஜேகோன் குறித்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago