2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி

R.Maheshwary   / 2021 நவம்பர் 10 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குறணை பிரதேசத்தில் வசிக்கும் வெளிநாடு செல்ல இருப்பவர்கள் பலரின் வேண்டுகோளுக்கு அமைய, மொடர்னா  (Mordena) முதல் தடுப்பூசியை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன்  நேற்று (09) தெரிவித்தார்


இவர்கள் தமக்கான முதல் தடுப்பூசிகளை இம்மாதம் நாளை (11)   வியாழக்கிழ‌மை அலவத்துக்கொடை தேசிய பாடசாலையில் மு.ப  7.00 மணி தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாடு செல்வதற்கு தடுப்பூசிகளை பெற எதிர்பார்த்து இருப்பவர்கள் இம்மாதம் 09ஆம் திகதி மற்றும் 10ஆம் திகதிகளில்  காலை 9.00 மணி தொடக்கம் பகல் 2.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அக்குறணை பிரதேச சபைக்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசிகளை பெறுவதற்கு பதிவு செய்ய வரும்பொழுது கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை, விசா,  (Passport copy, NIC copy, visa or appointment copy) ஆகிய ஆவணங்களை உடன் எடுத்து வருமாறும் வேண்டப்பட்டுவதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்

தடுப்பூசிகளை பெறுவதற்காக முன்னதாக பதிவு செய்து டோக்கன் பெற்றவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக 11 ஆம் திகதி வியாழக்கிழமை அலவதுகொடை தேசிய பாடசாலையில் தமக்கான முதல் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் செலுத்திக்கொள்ள முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X