Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 30 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா இராகலை மற்றும் கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில்
நேற்று முன் தினம் ( 29) மாலை பெய்த கடும் மழை காரணமாக, என்றும் இல்லாதவாறு அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர் காரணமாக நுவரெலியா, பொரலந்த கந்தப்பளை கல்பாலம் இராகலை நடுகணக்கு ஐபொரஸ்ட் கோணபிடிய டயகம உட்பட பல பிரதேசங்களில் காணப்படும் விவசாய நிலங்களுக்கும் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,
அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதான வீதிகளில் வெள்ளநீர் நிரம்பிக்காணப்படுவதால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .