2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்தில் 01 பலி:03 வைத்தியசாலையில்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை 21 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்  மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து அக்கரப்பத்தனை பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் பின்பகுதியில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அத்தோடு  பாதையை கடக்க முயன்ற முதியவர்  மீதும் மோட்டார் சைக்கிள்  மோதியுள்ளதுடன் அதன் பின்னர் பஸ்ஸின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக   பொலிஸார்  மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணை மூலம்  தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மற்றும் முதியோரும் பிரதேச மக்கள் போக்குவரத்து பொலிஸ்சாரின் உதவியுடன் லிந்துலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் போது மேலதிக சிகிச்சைக்காக முதியோரும். மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டதுடன் இதில் மற்றுமொருவர் தொடர்ந்து லிந்துலை.  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு விபத்து ஞாயிற்றுக்கிழமை (21) அன்று இரவு 9 மணிக்கு நுவரெலியாவில் ஹாவாஎலிய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. நுவரெலியா பகுதியில் இருந்து சென்ற  மோட்டார் சைக்கிலும் கந்தபளை பிரதேசத்தில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கெப் ரக வாகனமும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 21 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ‌ 

இவ்வாறு இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெப் வாகன சாரதி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

துவாரக்ஷான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .