2026 ஜனவரி 21, புதன்கிழமை

வேவர்லியில் சிறுத்தையின் சடலம் மீட்பு

Editorial   / 2021 ஜூலை 04 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், துவாரக்ஷான்

மக்கள் வழங்கிய தகவல்களை அடுத்து, டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டத்தை அண்மித்த  ஆக்ரோயா ஆற்றோரத்தில் சுமார் மூன்று அடி   சிறுத்தையின்  சடலமொன்று நேற்று (04) மீட்கப்பட்டுள்ளது என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுத்தையின் சடலத்தில் காயங்கள் காணப்படுகின்றன என்பதுடன் அந்த சடலத்தை   நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், சிறுத்தையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X