2026 ஜனவரி 21, புதன்கிழமை

வைத்தியசாலையின் செயலால் மக்கள் பாதிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 30 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மஹிந்தகுமார்

இரத்தினபுரி- தும்பர தோட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதால்,
இத்தோட்ட மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

‘தமக்கு நோய் ஏற்பட்டால், 5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இங்கிரிய
வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும்‘ என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

எனினும்‘ இம்மாதம் 3ஆம் திகதி பெய்த கடும் மழையால் அத்தோட்டத்தில் மண்சரிவு
ஏற்படலாம் என தேசிய கட்டட ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்தே 
இவ்வைத்தியசாலையை மூட நேரிட்டதாக‘ வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X