Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள் மத்தியில் வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுவொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (19) இடம்பெற்றது.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில் இலங்கை பொலிஸ் தலைமையக திணைக்களத்தின் போக்குவரத்துப்பிரிவு இவ்விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சரியான முறையில் வீதி சமிஞ்சைகளை கடைப்பிடித்தல் மற்றும் தவறான முறைகளில் வீதி சமிஞ்சைகளை கடைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கினிகத்தேனை, நல்லதண்ணி, நோட்டன் பிரிட்ஜ், வட்டவளை போன்ற பிரதேசங்களிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்துகொண்டனர்.


8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026