Kogilavani / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
வாகன விபத்துகளை மட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய மாகாணத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை போக்குவரத்து வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண வாகன போக்குவரத்து ஆணையாளர் நிரஞ்சன் சேனாதீர தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் மட்டும் வாகன விபத்துகள் மூலம் 352 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் மத்திய மாகாணத்தில் வாகன விபத்துகள் மூலம் உயிரிழந்த 352 பேரில், 194 பேர் கண்டியையும் 118 பேர் மாத்தளை மாவட்டத்தையும் 40 பேர் நுவரெலியா மாவட்டத்தையும் சேர்நதவர்கள் என அவர் தெரிவித்தார்.
இப்போக்குவருத்து வாரத்தில் வாகன விபத்துகள் சம்பந்தமாக மக்களை அறிவூட்டும் நிகழ்வும், சட்ட விதிகளை மீறி வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் மேட்கொள்ளப்படும் என்றும் இதற்கு பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களது உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago