2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

Sudharshini   / 2015 நவம்பர் 15 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, காலி பிரதான வீதியில் களுவெல்லயிலிருந்து காலி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சனிக்கிழமை(14) இரவு 8.10க்கு, பாதையை கடக்க முற்பட்ட பாதசாரியை மோதி விபத்துக்குள்ளதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயங்களுக்குள்ளான சாரதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், பதுளை, கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்;த சுந்தரம் தங்கராசா (வயது 68) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .