2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மூதாட்டி பலி

Sudharshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி - குருநாகல் வீதியில் யட்டிவாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (10) மாலை  இடம்பெற்ற விபத்தில், 80வயதான நிமலனி அலுவிஹார என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கலகெதரையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, யட்டிவாவல பிரதேசத்தில் வைத்து பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த போது, குறித்த பஸ்ஸில் ஏறுவதற்காக  வந்தவரே குறித்த பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார்.

இதில், படுகாமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும்  விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .