Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு தொகுதிக்கு, மறைந்த இராஜாங்க அமைச்சர் வேலாயுதத்தின் பெயரை வைக்க அரசாங்கம் முன்வரவேண்டும்' என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'அமரர் கே.வேலாயுதம் சிறந்த தொழிற்சங்கவாதி மட்டுமல்ல, சிறந்த அரசியல்வாதியுமாவார். அவர் தனது வாழ்நாளில் 75 சதவீதமான காலத்தை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்துள்ளார்.
எனவே, மீரியபெத்த பகுதியில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தல் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு தொகுதிக்கு மறைந்த இராஜாங்க அமைச்சர் வேலாயுதத்தின் பெயரை சூட்டுவதன் மூலம் அவருடைய சேவைக்கு ஒரு அங்கிகாரம் வழங்கப்பட்டதாக அமையும்.
மேலும், அமரர் வேலாயுதம் தோட்ட தொழிலாளர்களுக்காக தனது கருத்துக்களை என்றும் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவர். இறந்த பின்பு அவருடைய உடலை அவரது தொகுதியில் தகனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். அந்தளவுக்கு அந்த தொகுதி மக்களை நேசித்திருந்தார் என்பதற்கு அது ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்ட கால உறுப்பினராக இருந்த காரணத்தாலும் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே பிரதமராக உள்ளதாலும் மீரியபெத்த வீடமைப்பு திட்டத்துக்கு மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்தின் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும். அதனை அந்த மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago