Editorial / 2018 ஜனவரி 05 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கெளஷி, எஸ்.சுஜிதா
இரட்டைச் சிசுக்களைச் சுமந்திருந்த நிறைமாதக் கர்ப்பிணி, தனது தலைப்பிரசவத்துக்கான பிரசவ வலி ஏற்பட்ட போது, வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லாமையால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அத்தோட்டத்தைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணிக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அது அப்பெண்ணுக்குத் தலைப்பிரசவம் என்பதுடன், தன்னுடைய வயிற்றில் இரண்டு சிசுகளை, அப்பெண் சுமந்துகொண்டிருந்துள்ளார்.
பிரசவலி தொடர்பில், ஹொலிரூட் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டவுடன், அம்புலன்ஸ் வாகனமும் வந்துள்ளது. எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் போதே, கர்ப்பிணி இறந்திருந்ததாகவும், அவருடைய சடலம், பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் லிந்துலை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, அம்புலன்ஸ் வாகனம் வந்திருந்த போதிலும், பிரசவ வலியைக் குறைப்பதற்காக அங்கிருந்த சிலர், வழிபாடுகளில் ஈடுபட்டுக் காலம் தாழ்த்தியமையால், அப்பெண்ணை வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டுச்செல்ல முடியாமல் போய்விட்டது எனவும், அதனாலேயே நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்துவிட்டாரென்றும் அறியமுடிகின்றது. எனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .