2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஸ்கொட்லாந்து யுவதிகளிடம் கொள்ளையடித்தவர்கள் கைது

பாலித ஆரியவன்ச   / 2018 ஜூன் 17 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல பகுதியில் அமைந்துள்ள 9 வளைவுகள் பாலத்தை பார்வையிட வந்த ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு யுவதிகளிடமிருந்து கைப்பையை கொள்ளையடித்துச் சென்ற இளைஞர்களை தமது அலைபேசி மூலமே  பைகளை பறிகொடுத்த யுவதிகள் புகைப்படம் எடுத்து அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

நேற்று (16) பகல் 1 மணியளவில் குறித்த யுவதிகள் இருவரும் பாலத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, ஐவர் அடங்கிய இளைஞர் குழு யுவதிகளின் பையை பறித்துச் சென்றுள்ளது. இதன்போது, குறித்த யுவதிகளுள் ஒருவர் தனது அலைபேசி மூலம் கொள்ளையர்களை புகைப்படம் எடுத்து பொலிஸாரிடம் காண்பித்ததையடுத்து, 4 சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து, யுவதிகளின் கைபையும் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த 82,000 ரூபாய் பெறுமதியான கெமரா மற்றும் 10,000 ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் ஒரு சந்தேகநபர் 46,000 ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளாரனெ தெரிவித்த பொலிஸார் இவரைத் தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் 20 மற்றும் 21 வயதானவர்களெனவும், இவர்கள் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X