Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் பல மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பில், ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் தலைவர் கு.துரைராஜசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் தொற்று உறுதியான மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் பல மாணவர்கள் தங்களது சுயவிருப்பத்திற்கு அமைய, கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தொற்று உறுதியான சில மாணவர்கள் வகுப்பறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், கல்லூரியில் போதிய கட்டட வசதி இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மாணவர் விடுதியிலேயே தொற்று பரவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த கல்லூரியில் கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இணையம் ஊடாக கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு நிர்வாக செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025