Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 30 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ளது.
ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து அவர்களின் தலைமையில் இன்று(30) ஹங்குரன்கெத்த பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளைப் பெற்று பிரதி தவிசாளரானார்.
மேலும் ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவிக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர் ராமையா ருசன்ஸ்குமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். இதில் இ.தொ.கா வேட்பாளர் ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளை பெற்று பிரதி தவிசாளர் ஆனதுடன்., ஐ.ம.ச வேட்பாளர் 20 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
மொத்தமாக ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்காக 42 உறுப்பினர்கள் தேர்வாகி சபை உறுப்பினர் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உறுப்பினர் பங்கீடு விபரம் பின்வருமாறு...
•தேசிய மக்கள் சக்தி - 20
•இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 02
•ஐக்கிய தேசிய கட்சி - 03
•பொதுஜன ஐக்கிய முன்னணி - 01
•ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 04
•ஐக்கிய மக்கள் சக்தி - 09
•சர்வஜன அதிகாரம் - 01
•சுயாதீனக்குழு 1 - 01
•சுயாதீனக்குழு 2 - 01
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025