Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 28 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு நேற்றைய தினம் (27) 6600 லீற்றர் எரிபொருள் கிடைக்கப்பெற்றதுடன், இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், குறித்த டீசல் தொகை அத்தியாவசிய தேவையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இதன்போது அத்தியாவசிய தேவையற்ற வாகனங்களுக்கும் மட்டுப்படுத்தலுடன் இன்று டீசல் விநியோகிக்கப்பட்டது.
முன்னதாக இராணுவத்தினரால் வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு அமையவே டீசல் வழங்கப்பட்டதுடன், சாதாரண வாகனங்களுக்கு மட்டுப்படுத்தலுடனும் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுப்படுத்தலின்றியும் டீசல் விநியோகிக்கப்பட்டது.
இதன்போது இராணுவத்தினருக்கு ஹட்டன் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இதேவேளை ஹட்டன் டிப்போ மூலம் குறுகிய தூர சேவைகளுக்கான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .