2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஹட்டனில் தொற்று நீக்கிகள் தெளிப்பு

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் நகரின் பல இடங்களுக்கு, இன்று (23) தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டன.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகையை, ஹட்டன பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஷ்ணனின் வழிகாட்டலிழன் கீழ், இலங்கை செஞ்சிலுவை சங்கம், நுவரெலியா கிளை காரியாலயம், ஹட்டன் – டிக்கோயா நகர சபை சுகாதார ஊழியர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நகரம், நகரை அண்மித்த பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், மக்கள் அதிகம் வருகை தரும் பகுதிகளான பஸ் தரிப்பிடம், பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதி உள்ளிட்ட பாதுகாப்பு வேலிகளுக்கும் கிருமி தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டன.

அத்துடன் சில வீதிக், இரசாயன திரவம் தெளிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .