2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் - ஸ்டிதரன் தோட்டம், புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலமொன்று, இன்று (07) காலை மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமையவே சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றார்களா என பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம், இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 50 – 60க்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X