2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஹட்டன் தீயில் ஆசிரியை மரணம்

J.A. George   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

ஹட்டன், ஆரியகமவில்  குடியிருப்பொன்றில் ஏற்பட்ட  தீ விபத்தில், மூன்று பிள்ளைகளின் தாயான , ஓய்வுப்பெற்ற ஆசிரியை (வயது 74)  உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கான பொருட்களை கொள்வனவுச் செய்வதற்காக,  வீட்டிருந்த சகலரும் பொருட்களைக் கொள்வனவுச் செய்வதற்காக, நகருக்குச் சென்றிருந்த வேளையிலேயே நேற்று (24) மாலை 3.30 மணியளவில் தீ பற்றியுள்ளது 

பிரதேச வாசிகளினல்  தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும்,  தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை . சடலம் கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X