2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹட்டன் நகரில் மீண்டும் குவிக்கப்படும் கழிவுகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன்- டிக்கோயா நகரசபையால் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படாத கழிவுகள் ஹட்டன்- ஞாயிறு சந்தைப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், ஞாயிறு சந்தை வர்த்தகர்களும், சந்தைக்கு வரும் நுகர்வோரும் பாரிய சுகாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஹட்டன் நகரப் பகுதிகளில் , மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் நாளொன்றுக்கு 2 தொன் வரை சேர்வதாகவும், மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியாத கழிவுகள் 1 தொன் வரை சேர்வதாகவும் ஹட்டன்- டிக்​கோயா நகர சபையினர் தெரிவித்துள்ளனர்.

மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும் கழிவுகள் மஸ்கெலியா- ரிகார்டன் மீள்சுழற்சி மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு கொண்டு செல்லப்படாத கழிவுகளே இவ்வாறு சந்தைப் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலைக் காரணமாக, இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன், வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஞாயிறு சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் குறித்து ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணனிடம் வினவிய போது, “ ஹட்டன்- டிக்கோயா நகரசபையால் சேர்க்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இட​மொன்று இல்லாமையே இந்தப் பிரச்சினைக்கான காரணமென்று” அவர் தெரிவித்தார்.

அத்துடன், இரண்டு அரசியல் கட்சிகளிடம் காணப்படும் பிணக்குகள் காரணமாகவே, குறித்த கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடமொன்றைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X