Freelancer / 2023 மார்ச் 21 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கடந்த மூன்று ஆண்டுகளாக நோர்வூட் எரிபொருள் நிரப்பும் நிலையம் முதல் பொகவந்தலாவ நகரம் உள்ள பிரதான வீதி பாரியளவில் குன்றும் குழியுமாக உள்ளதால், அதைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த வீதி அபிவிருத்தி செய்யும் பணி இடம்பெற்றது. எனினும், அந்த அபிவிருத்திப் பணி மிகவும் மந்தமாகவே இருந்தது.
தொடர்நது கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதி செப்பனிடும் பணி இடைநடுவில் கைவிப்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை பெற்று கொள்ள ஆம்புலன்ஸ் மூலம் செல்ல முடியாத நிலையில் அந்த பிரதான வீதி உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேரிக்கை விடுக்கின்றனர்.

1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago