2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஹுனுவலவில் 500 பேர் தனிமை

Kogilavani   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி ஹுனுவல தோட்டத்தின் 3ஆம் பிரிவில், 101 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர்,  நேற்று முன்தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படித் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்தே, 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் அறிவிப்பு உடனடியாக அமுல்படுத்தப்பட்டதால், தோட்ட மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் இதனால், பல குடும்பங்கள் பட்டினியில் வாடுவதாகவும் இரத்தினபுரி மாவட்ட மறுமலர்ச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் கே.தியாகேஸ்வரன் தெரிவித்தார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X