Mithuna / 2024 ஜனவரி 04 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி - அருப்பொல பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த பஞ்சகர்மா நிலையம் (SPA) ஒன்றிலிருந்து போதைப்பொருளை கைப்பற்றிய அலதெனிய பொலிஸார், அங்கு பணி புரியும் நான்கு பணியாளர்களைக் கைது செய்துள்ளனர்.
கண்டி-அலதெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குறித்த பஞ்சகர்மா நிலையத்தை சோதனையிட்டபோது, அங்குப் பணி புரியும் பெண் முகாமையாளர் மற்றும் அவரது உதவியாளர் இருவரிடமிருந்து 47 கிராம் மற்றும் 400 மில்லி கிராம் ஹெரொயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதுடன், மேலும் இரு ஊழியர்களிடம் இருந்து 215 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கண்டி நீதவான முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அலதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025