2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹைலன்ஸ் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2023 ஜூன் 14 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ். சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ 

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்   தசாப்தங்களை கடந்து பணியாற்றிய நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட   ஆசிரியர்களை மீண்டும் அதே கல்லூரிக்கு நியமிக்க வேண்டுமெனக் கோரி   திங்கட்கிழமை (14 ) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

  ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியின் முன்றலில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர   மாணவர்களால் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இணைந்தே இந்த   ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

 குறித்த பாடசாலையில் முறையே 23, 15, 9 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையில்   இருந்த மூன்று ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன்   அதற்கு பதிலாக மூவரை குறித்த கல்லூரிக்கு ஹட்டன் கல்வி வலயத்தினால்   இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறான இடமாற்றம் வழங்கியமை மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் எனவும் அவர்களை மீண்டும் கல்லூரிக்கு நியமிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தரப்பில் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனம் வழங்கியதற்கு அமைவாக உரிய ஆசிரியர்கள் தமது கடமையை செய்ய வேண்டும் எனவும் மீறினால் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வயமைச்சினால் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டதக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X