2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஹோட்டன் சமவெளிக்கு ஜனாதிபதி விஜயம்

Freelancer   / 2023 டிசெம்பர் 16 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தர சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து ஹோட்டன் சமவெளியை அண்மித்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவிற்கான கண்காணிப்பு விஜயமொன்றை ஜனாதிபதி மேற்கொண்டிருந்த போதே இதனை தெரிவித்தார்.

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவிற்கு ஜனாதிபதி நேற்று  சென்றிருந்தார்.

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவை அண்மித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இடங்களை வரைபடத்தின் மூலம் மேற்பார்வை செய்த ஜனாதிபதி, ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா, அதனைச் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபினை தயாரித்து விரைவில் தன்னிடம் கையளிக்குமாறும் வலியுறுத்தினார்.

ஹோட்டன் சமவெளியை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து அபிவிருத்தி செய்யும் பட்சத்தில், அதிகளவான வெளிநாட்டு வருவாயை ஈட்ட முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X