2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

ஹோட்டன் சமவெளிக்கு புதிய வீதி; தேசிய வனப் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

ஹோட்டன் சமவெளியைப் பார்வையிடச் செல்வதற்காக புதிய வீதி ஒன்று அமைக்கப்படுவதாகவும் இதற்கு தாம் பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் தேசிய வனப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

3,160 ஹெக்டெயர் நிலப்பரப்பைக் கொண்ட ஹோட்டன் சமவெளியானது, உலக மரபுரிமைகளில் ஒன்றென, தேசிய வன பாதுகாப்பு சங்கத்தின் தவிசாளர் அத்தீக் நசீர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஹோட்டன் சமவெளியைப் பார்வையிட, நன்பேரியல் தோட்டம் ஊடாக நகர் வரை வாகனங்களில் பயணித்த பின்னர், கால்நடையாக உலக முடிவு வரை செல்வதற்காக புதிய வீதியொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்​டிபொல, ஒய்யா ஊடாக ஹோட்டன் சமவெளிக்குச் செல்வதற்கு 2 வீதிகள் காணப்படும் நிலையில், புதிய வீதியொன்றை அமைப்பதன் மூலம், அது அரிய வகை மரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிவடைவதற்குக் காரணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வனப்பகுதியில் 50 வகையான பறவை இனங்கள் வாழ்ந்து வரும் நிலையில், மண்சரிவு, வாகன போக்குவரத்துக்குப் பொருத்தமற்ற பிரதேசமென அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தில் புதிய வீதியை அமைப்பதால், அது சுற்றுலாத்துறையினருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என, தேசிய வன பாதுகாப்பு சங்கத்தின் தவிசாளர் அத்தீக் நசீரின் ஊடக அறிக்கையில் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .