2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஹோல்புறூக் நகரில் மகளிர் தின பேரணி

Freelancer   / 2023 மார்ச் 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

சர்வதேச மகளிர் தினத்தன்று  லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி துரைராஜ் ரேஷ்னி மற்றும் வைத்திய அதிகாரி சந்துன் பிரசன்ன ஜயலத் ஏற்பாட்டில் அக்கரப்பத்தனை  ஹோல்புறூக் நகரில் பேரணி   இடம்பெற்றது.

மெல்போரல் சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது.

பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்ப வன்முறை, சிறுவயது திருமணம், பெண்களுக்கு எதிரான உரிமை மீறல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஹோல்புறூக் தமிழ் வித்தியாலய   சிங்கள மகா  வித்தியாலய மாணவர்கள் பொது சுகாதார அதிகாரிகள் ஆகியோரால் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

இப்பேரணியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். வைத்திய அதிகாரிகள் தொழிலாளர்கள் பாடசாலை மாணவர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X