Sudharshini / 2016 மே 05 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி நானுஓயா எடின்புரே பகுதியில் பயணித்த வானொன்று 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த வானே நேற்று(4) புதன்கிழமை காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்தில் சாரதியும் மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும் சாரதி பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாகவும் மற்றையவர் படுங்காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .