2025 ஜூலை 16, புதன்கிழமை

அபிவிருத்தி குழுத் தலைவராக இராதாகிருஷ்ணனை நியமிக்கவும்:மனோ

Sudharshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனை நியமிக்க வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதற்குள் இம்மாவட்டத்திலுள்ள  ஐ.தே.க எம்.பிக்கள் எவரையும்  உள்வாங்கும் தேவை ஏற்படின், இணைத்தலைவர்களில் ஒருவராக இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனை நியமிக்க வேண்டும் என அவர்; மேலும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தரவுகளின் அடிப்படையில்  நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி குழு தலைவர் நியமனம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அத்துடன், கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுதேர்தலின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிட்ட கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதுவரை வரலாற்றில் எந்தவொரு தமிழ்  வேட்பாளரும் பெற்றிருக்காத அதிகூடிய வாக்குகளையே பெற்றுள்ளது.

இந்நிலையில் கூட்டணியின் தலைவரான நானும் இணைப் பிரதித் தலைவர் பழனி திகாம்பரமும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகிக்கும் நிலையில், கூட்டணியின் இன்னொரு இணைப் பிரதி தலைவரும், இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைவராக நியமிக்கப்படுவது அவசியமானதாகும்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X