2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

'ஆசிரியர் உதவியாளர்கள் தமக்கான உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'

Sudharshini   / 2016 மே 02 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஆசிரியர்களின் உரிமை என்பது மாணவர்களின் கல்விக்கான உரிமையோடு இரண்டரக் கலந்தது. 6,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை பெறும் ஆசிரியர் உதவியாளர்கள், மாணவர்களுக்கான கல்வி  உரிமைக்காக போராடுவதற்கு முன்னர் தமக்கான உரிமைகளுக்காக போராடும் நிலைமையை, ஆளும் வர்க்கமும் அவர்களின் மலையக பிரதிநிதிகளும் ஏற்படுத்தியுள்ளனர். இது திட்டமிடப்பட்ட சதி' என மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டார்.

'இராஜாங்க கல்வி அமைச்சர், மலையகத்தை சார்ந்த அரசியல்வாதியாக இருந்தபோதும், ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

பாடசாலைகளுக்கான வளங்கள் சமத்துவமற்ற வகையில் பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிலையில், அனைத்துப் பாடசாலைகளிலுமிருந்து சிறந்த உயர்தர பெறுபேறுகளை ஆசிரியர்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நியாயமற்ற வகையில் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கோருகின்றனர். இந்நிலைகளை மாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .